டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

குவாரி பெர்மிட் தருவதாக  ரூ.70 லட்சம் மோசடி

மதுரை கே.கே.நகர் பகுதி மல்லிகை குடியிருப்பைச் சேர்ந்தவர் பொன்படி (48). இவரிடம் பிரேம்குமார் என்பவர் திருவள்ளுவர் மாவட்டத்தில் குவாரிகள் வைத்திருப்பதாகவும், அதை பெயர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:42 am

ஜெயப்பாண்டி

குவாரி பெர்மிட் பெயர் மாற்றித் தருவதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து வழக்குப்பதிந்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

மதுரை கே.கே.நகர் பகுதி மல்லிகை குடியிருப்பைச் சேர்ந்தவர் பொன்படி (48). இவரிடம் பிரேம்குமார் என்பவர் திருவள்ளுவர் மாவட்டத்தில் குவாரிகள் வைத்திருப்பதாகவும், அதை பெயர் மாற்றித்தருவதாகவும் கூறியுள்ளார்.இதையடுத்து பிரேம்குமார் தரப்பினரிடம் 25.3.2013 அன்று ரூ.70 லட்சத்தை பிரேம்குமார் தரப்பினரிடம் கொடுத்துள்ளார். ஆனால், உறுதியளித்தபடி பிரேம்குமார் குவாரி பெர்மிட்டை பெயர் மாற்றித் தனக்குத் தரவில்லை என பிரேம்குமார் புகார் கூறினார். மேலும், இதுதொடர்பாக மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அதன்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதன் அடிப்படையில் பிரேம்குமார், ரமாதேவி, பிரதீப், பஞ்சவர்ணம் ஆகிய 4 பேர் மீது மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீஸார் புதன்கிழமை இரவு வழக்குப்பதிந்துள்ளதாக தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.